கொழும்பில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த 30 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலுள்ள மற்றுமொரு பிரதான ஆண்கள் பாடசாலையின் மாணவர்களே இன்று மதியம் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட மாணவர்களை தாம் தடுத்து வைத்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாணவர்கள், பெண்கள் பாடசாலையின் நுழைவாயிலில் பதற்றம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதுடன் பாடசாலைக்குள் பலவந்தமாக சென்றுள்ளனர்.
பாடசாலைகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி கொண்டாடங்கள் நடைபெற்று வருவதால் பாடசாலைகளுக்கு அருகில் பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.