தனது சகோதரன் கண்முன்னே பலியான இளைஞன் : இலங்கையில் நடந்த கோரம்!!

1666

பசிந்து விஜேசேகர..

அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் வாகனமொன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதயதில் மோட்டார் வாகனத்தை செலுத்திய இளைஞன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

புத்தல பெல்வத்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் உயர்தர மாணவன் ஒருவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

புத்தல பொலிஸ் பிரிவிற்குட்ட பெல்வத்த சீனி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த வாகன விபத்தில் பசிந்து விஜேசேகர என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

விபத்து இடம்பெறும் போது மோட்டார் வாகனத்தில் மூன்று பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் காயமடைந்த பாடசாலை மாணவன் உயிரிழந்த இளைஞனின் சகோதரன் என தெரிவிக்கப்படுகிறது.