கோர விபத்தில் தம்பியின் கண் முன் உயிரிழந்த அண்ணன்!!

1441

விபத்தில்..

புத்தல பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. புத்தல பெல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் உட்பட மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். புத்தல பொலிஸ் பிரதேசத்தை சேர்ந்த பெல்வத்தை சீனி நிறுவனத்திற்கு அருகாமையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது தம்பியின் கண் முன்னே அண்ணன் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. காயமடைந்த தம்பியினால் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. காயமடைந்த பாடசாலை மாணவன், உயிரிழந்தவரின் கடைசி சகோதரன் என தெரிவிக்கப்படுகின்றது.