100% வாக்குகளையும் பெற்ற ஒரே ஜனாதிபதி!!

305

Korea

வடகொரியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் எதிர்பார்த்தபடியே 100 சதவிகித வாக்குகளையும் பெற்று ஜனாதிபதி கிம் ஜோங் உன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கிம் போட்டியிட்ட மவுன்ட் பீக்டு தொகுதியில் பதிவான அத்தனை வாக்குகளும் ஜனாதிபதிக்கு ஆதரவாகப் போடப்பட்ட வாக்குகள் ஆகும்.

இந்த வெற்றியின்மூலம் சக்திவாய்ந்த தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர், ஆயுதப் படைகளின் உயர்தளபதி உள்ளிட்ட பதவிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியையும் அவர் பெறுகின்றார். அனைவரும் ஜனாதிபதிக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பது மக்கள் அவருக்கு அளித்துள்ள முழுமையான ஆதரவு மற்றும் ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடு ஆகும்.

அவர்மீது கொண்டுள்ள உயர்மதிப்பை வெளிப்படுத்தும்விதமாக மக்கள் அவருக்கு விசுவாசமாக நின்றுள்ளனர் என்று அந்நாட்டின் அதிகாரபூர்வமான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 700 தொகுதிகளிலும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரே களமிறங்கிய நிலையில், தேர்தல் என்பது பெயரளவில் மட்டுமே இருந்தது.

வாக்களிப்பு கட்டயமாக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் இருந்தவர்களைத் தவிர அரசின் பதிவு பெற்ற அனைத்து மக்களும் வாக்களித்துள்ளனர் என்றும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை சந்திக்கும் வடகொரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கின் ஜோங் உன் ஆட்சியில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.