வவுனியாவில் இன்று நான்கு கொரோனா தொற்றாளர்கள்!!

1560

கொரோனா..

வவுனியா தனிமைப்படுத்தில் முகாமை சேர்ந்த 4 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பலருக்கு பிசிஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

அதன் முடிவுகள்இன்று வெளியாகியது. அதனடிப்படையில் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.

யாழ். ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வடமாகாணத்தில் இன்று மேலும் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ் பல்கலை மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் இன்று (09.03.2021) 705 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ். போதனா ஆய்வுகூட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பரிசோனையில் வடமாகாணத்தில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 22 பேருக்கும் (வசாவிளான் தனிமைப்படுத்தல் மையத்தில் 11 பேருக்கும்), மன்னார் மாவட்டத்தில் 17 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 04 பேருக்கும் இவ்வாறு இன்றைய தினம் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.