வவுனியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!!

1218

கொரோனா..

வவுனியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (10.03) இரவு வெளியாகிய நிலையில் ஓமந்தை அரச வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஈரப்பெரியகுளம், நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டமை இன்று (11.03) காலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்ட நான்கு பேருடனும் தொடர்புகளைப் பேணியவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.