வவுனியா வைத்தியசாலையில் பிறந்த கு.ழந்தையின் ம.ரணத்தில் ச.ந்தேகம் : தாயின் முறைப்பாட்டையடுத்து வழக்கு வி.சாரணை!!

2950

வவுனியா வைத்தியசாலையில்

வவுனியா பொது வைத்தியசாலையில் கடந்த 14.12.2020 அன்று ம.ரணித்த கு.ழந்தை தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் நேற்று (10.03) அழைக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 07.07.2021 திகதிக்கு திகதியிடப்பட்டது.

குறித்த கு.ழந்தை கடந்த 14.12.2020 அன்று நண்பகல் 12 மணியளவில் பிறந்து அதே தினம் மலை 4.45 மணியளவில் ம.ரணித்திருந்தது. குழந்தையின் தாய்க்கு சத்திர சிகிச்சையின் மூலமே கு.ழந்தையை பிரசவிக்க முடியும் என மகப்பேற்று வைத்தியர் கூறிய நிலையில்,

வைத்தியசாலையில் இருந்த வைத்தியர்களால் சாதாரண பிரசவத்தின் மூலம் கு.ழந்தையை பிரசவிக்க முயன்றுள்ளதாக தாய் கு.ற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

ஏழு மணி நேரத்தின் பின்னர் பிறந்த கு.ழந்தை சில மணி நேரத்திலேயே இ.றந்துவிட்டது. தனக்கு சத்திர சிகிச்சை மூலமே கு.ழந்தை பிரசவிக்கப்பட வேண்டும் என மகப்பேற்று வைத்தியர் பரிந்துரைத்திருந்ததாக சம்பவதினமான அன்று வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரிடம் தான் தெரிவித்த போதும், அவர் அதனை கண்டுகொள்ளவில்லை என தாய் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் அலட்சியத்தாலேயே தனது கு.ழந்தை ம.ரணித்தது என பெற்றோர்கள் ச.ந்தேகித்த காரணத்தால் பெற்றோரின் வேண்டுதலின் பேரில் கடந்த 16.12.2020 அன்று கு.ழந்தையின் உ.டல் சட்டவைத்திய ப.ரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ம.ரண ப.ரிசோதனை அறிக்கையில் Fetal distress following obstructed labor due to clinically diagnosed shoulder dystocia காரணமாக பிள்ளைக்கு மரணம் ஏற்ப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் வழக்கு தொடர்பான வி.சாரணைகள் வவுனியா நீதிமன்றில் நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு எதிர்வரும் 07.07.2021 திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளதாக கு.ழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும் கு.ழந்தையின் பெற்றோரால் கு.ழந்தையின் ம.ரணம் குறித்து வடமாகாண ஆளுநர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கும் மு.றைப்பாடு செய்யப்பட்டுள்ளது.