விபத்து..
வவுனியா கண்டி வீதியில் (ஏ9) தெற்கு வலயக்கல்வி அலுவலத்திற்கு முன்பாக இன்று (11.03.2021) மதியம் 2.20 மணியளவில் இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்,
தெற்கு வலயக்கல்வி அலுவலத்திற்கு முன்பாக வீதியின் மறுபக்கம் திரும்ப முற்பட்ட சமயத்தில் மோட்டார் சைக்கிலின் பின்புறமாக வந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியுள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளின் சாரதி போக்குவரத்து வீதி விதிமுறைகளை மீறி (முன்னால் திருப்பத் தடை) மோட்டார் சைக்கிலை வீதியின் மறுபக்கம் மாற முற்பட்டமையே விபத்துக்கு காரணமென வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.