வன்னி தேர்தல் மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பா.உ சுரேன் ராகவன் நியமனம்!!

902

கலாநிதி சுரேன் ராகவன்..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளராகவும் (வெளிநாட்டு விவகாரம்), வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நியமனம் நேற்று (11.03) வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான நியமனக் கடிதத்தினை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனிடம் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.