நீராவி ரயில்..
கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த வைஸ்ரோய் நீராவி ரயில் இயந்திரத்தில் நேற்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு மணித்தியாலங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அதில் பயணித்த ரஷ்யாவின் இரண்டாவது கோடீஸ்வர வர்த்தகர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து கோடீஸ்வரர், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனிப்பட்ட பா.துகாப்பு பிரிவு உறுப்பினர்கள் 8 பேருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
அவர்கள் சுற்றுலா சபையின் அனுமதியுடன் நீராவி ரயில் என்ஜின் கொண்ட வைஸ்ரோய் ரயிலில் 10ஆம் திகதி கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓய ரயில் நிலையம் வரை பயணிப்பதற்கு ரயில்வே திணைக்களத்திற்கு பணம் செலுத்தியுள்ளனர்.
குறித்த ரயில் பயணித்துக் கொண்டிருந்த போது நீராவி என்ஜினில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோ.பமடைந்த ரஷ்ய நாட்டு கோடீஸ்வரர் அங்குள்ள அதிகாரிகளை தி.ட்டியுள்ளார். அத்துடன் கு.ழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். இரண்டு மணித்தியால தாமத்தின் பின்னரே அவர் உட்பட குடும்பத்தினர் தங்கள் இலக்கை சென்றடைந்துள்ளனர்.