அமேசானில் விற்பனையாகும் இலங்கை தேசிய கொடியுடனான தரைவிரிப்பு : வெளிவிவகார அமைச்சு எடுத்த நடவடிக்கை!!

1629

அமேசானில்..

இலங்கை தேசிய கொடியுடனான தரைவிரிப்புகள் மற்றும் பாதணிகள் உலகின் முன்னணி இணைய வழி விற்பனை தளம் அமேசானில் விற்பனைக்காக காட்சிப்படுத்தியுள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து சீனாவில் இருக்கும் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளரை உடன் தொடர்பு கொள்ளுமாறு பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து கொழும்பில் உள்ள சீன தூதுரகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கை தூதரகம் அமேசான் என்ற விளம்பர தளத்துடன் இந்த விடயம் குறித்து பின்தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் தரைவிரிப்பு ஒன்றை சந்தையில் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின், வொஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் கால் துடைக்கும் தரைவிரிப்பை 12 டொலர்களுக்கு விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.