வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம் -2021!!

1552

மகோற்சவ விஞ்ஞாபனம் -2021

கொடியேற்றம்-14.03.2021
சப்பறம்-26.03.2021
தேர்-27.03.2021
தீர்த்தம்-28.03.2021

சிவனடியார்களே! பாலில் நெய்யாக இருக்கும் இறைவனை ஆன்மாக்கள் மனம், வாக்கு, காயத்தால் வழிபடும் பொருட்டு உருவத்திருமேனி கொண்டு வவுனியா கோவில்குளம் திவ்விய ஷேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை வேண்டி அருளும்,

அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் சுவாமிக்கு நிகழும் மங்களகரமான சார்வரிவருஷம் பங்குனித் திங்கள் மாதம் 01ம் நாள் (14.03.2021) ஞாயிற்றுக்கிழமை பிரதமை திதியும் உத்தராட நட்சத்திரமும் அமிர்தசித்தயோகமும் கூடிய சுபதினத்தில் பகல் 12.00 மணிக்கு,

சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக் குருக்கள்(ஆலய பிரதம குரு) தலைமையில் துவஜாரோகணமாகி (கொடியேற்றம்) தொடர்ந்து 17நாட்கள் காலை மாலை உற்சவங்கள் நடைபெற திருவருளும் குருவருளும் கைகூடி உள்ளதால் அடியார்கள் யாபேரும் வந்து தரிசித்து இஷ்டசித்திகளைப் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.