வவுனியாவில் நடைபெற்ற “யுத்தத்தின் தாக்கமும் அதன் பின்னரான காலமும்” கண்காட்சி!!(படங்கள்)

314

“யுத்தத்தின் தாக்கமும் அதன் பின்னரான காலமும்” என்னும் தொனிப்பொருளில் சி.ஆர்.சி. நிறுவனத்தின் ஏற்பாட்டில் புகைப்பட கண்காட்சி இன்று (11) வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் ஆரம்பமான இக் கண்காட்சி இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.

வடபகுதியில் யுத்த காலங்களில் இடம்பெற்ற மனித படுகொலைகள், வெடிப்பு சம்பவங்கள், விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், மக்களின் அவலநிலை தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாகவும் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பாக இக் கண்காட்சி வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

வடமாகாண ஆளுனர் சந்திரசிறியினால் அரம்பித்து வைக்கப்பட்ட இக் கண்காட்சியை வவுனியா மாவட்டத்தின் தமிழ், சிங்கள் பாடசாலை மாணவர்கள் முதன்நாள் பார்வையிட்டு வருகின்றனர்.

ஆரம்ப நிகழ்வில் வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொலிபஸ் பெரேரா, மும்மதத் தலைவர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத்தலைவர் க.சிவலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் எம். ஜெயத்திலக்க, தர்மபால செனவிரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-படங்கள் பாஸ்கரன் கதீசன்-

1 2 3 4 5 6 7 8 9