தலைமன்னாரில் புகையிரதம் பேரூந்து மோதி கோர விபத்து : பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் படுகாயம்!!

10851

தலைமன்னாரில்..

தலைமன்னாரில் சற்று முன்னர் பேருந்து மீது தொடருந்து மோதி கோரவிபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்தில் சென்றவர்களில் 14 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை காயமடைந்தவர்களில் அதிகமானோர் பாடசாலை மாணவர்கள் என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தை தொடர்ந்து மன்னார் பொது வைத்தியாசாலையிலிருந்து ஐந்து நோயாளர் காவு வண்டிகள் தலைமன்னார் நோக்கிப் பயணித்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.