இலங்கையை சேர்ந்த பெண் வெளிநாட்டில் பரிதாபமாக ம.ரணம் : நேர்ந்த கொ.டு.மை!!

16696

ஜப்பான் நகோயா நகரத்தில்..

ஜப்பான் நகோயா நகரத்தில் அமைந்து தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் உ.யிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக வி.சாரணையை ஆரம்பிக்குமாறு ஜப்பான் நீதி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

33 வயதான விஷ்மா சந்தமாலி என்ற இந்த பெண் நகோயா நகரத்தில் உள்ள பிரதேசத்தில் உள்ள குடிவரவு குடியகல்வு அலுவலகத்தின் தடுப்பு நிலையத்தின் தனியான ஒரு அறையில் த.டுத்து வை.க்கப்பட்டிருந்தார்.

கடந்த ஆறாம் திகதி த.டுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணை பார்க்க அதிகாரிகள் சென்றிருந்த போது அவர் ம.யக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதன்போது அவர் உ.யிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த பெண்ணின் சுகாதார நிலைமை ப.லவீனமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

தன்னை தற்காலிகமாக விடுவிக்குமாறும் தனக்கு தீவிரமான உணவு தேவை ஒன்று உள்ளதாகவும் உ.யிரிழந்த பெண் பதிவொன்று வெளியிட்டுள்ளார். இந்த பதிவு ஜப்பான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

“எனக்கு உண்மையாகவே சாப்பிட வேண்டிய அவசியம் உள்ளது” என அவர் தடுப்பு நிலையத்தினுள் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்

எனினும் அவருக்கு உணவுக் குழாயுடன் தொடர்புடைய நோ.ய் ஒன்று உள்ளமையினால் அவரால் உரிய முறையில் சாப்பிட முடியாமல் போயுள்ளது. இதனால் அவர் நீண்ட நாட்களாக ஒழுங்கான முறையில் உணவருந்த முடியாமல் சி.ரமப்பட்டுள்ளார்.

இந்த பெண் த.டுத்து வைக்கப்பட்டிருந்த போது ம.ன அ.ழுத்தம் மற்றும் மோ.சமான உ.டல் நி.லை காரணமாக இந்த பெண் உணவு பெற முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்த பெண் வைத்திய சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் 2017ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஜப்பானுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது விசா காலாவதியாகியமையினால் கடந்த வருடம் ஒக்ஸ்ட் மாதம் முதல் அங்கு த.டுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ம.ரணத்திற்கான உரிய காரணம் வெளியாகாமையினால் உடனடியாக வி.சாரணைகளை ஆரம்பிக்குமாறு நீதி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.