விநோத அழைப்புகள்..
119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு பல விநோதமான அழைப்புகளும் வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு நாளொன்றுக்கு 1800க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. இதில் பல விநோதமான அழைப்புகளும் வருகின்றன.
தமது கு.ழந்தைகளுக்குப் ப.ய.மு.று.த்.தி உணவை ஊட்டுவதற்காக 119 இலக்கத்துக்கு அழைப்புகள் வருவதாகவும், வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டதாக கூறி 119க்கு அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வாறான அழைப்புகளை மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தியுள்ள அவர், அவசரமான விடயங்களுக்கு மாத்திரம் 119ஐ அழைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.