கொரோனாவால் பிரிந்திருந்த காதல் ஜோடி : ஒரே நேரத்தில் செய்த ஆச்சரிய செயல்!!

2005


காதல் ஜோடி..கனடாவில் கொரோனா காரணமாக பிரிந்திருந்த ஒரு காதல் ஜோடி, போட்டோஷூட் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுமாறு மிராண்டா ஆண்டர்சன் (21) என்ற புகைப்படக்கலைஞரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.வான்கூவரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த போடோஷூட் நடப்பதற்கு ஒரு மாதம் முன்பு, சவி நுகாலா என்ற அந்த காதலி, மிராண்டாவை தொலைபேசியில் அழைத்துள்ளார்.
தான் போட்டோஷூட் அன்று தன் காதலரான ஷரத் ரெட்டியிடம் புரபோஸ் செய்யப்போவதாகவும், அதை ரகசியமாக வைத்துக்கொள்ளுமாறும் கூறியிருக்கிறார். சும்மா ஒரு போட்டோஷூட்டுக்காக ஏற்பாடு செய்திருப்பதாக ஷரத்திடம் கூறுமாறு சவி மிராண்டாவிடம் கூற, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.


அனைவரும் அந்த நாளுக்காக தயாரகிக்கொண்டிருக்க, சரியாக போட்டோஷூட்டுக்கு இரண்டு நாட்கள் முன்பு மிராண்டாவுக்கு ஷரத்திடமிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.

அவர் மிராண்டாவிடம், போட்டோஷூட் அன்று தான் சவியிடம் புரபோஸ் செய்யப்போவதாகவும், அதை ரகசியமாக வைத்துக்கொள்ளுமாறும் கூறியிருக்கிறார். இதை சற்றும் எதிர்பாராத மிராண்டாவுக்கோ ஒரே திகைப்பு, இருந்தும் வெளியில் எதையும் காட்டாமல், அப்படியே செய்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்.


இதற்கிடையில் தனித்தனியே இருவரையும் தொடர்பு கொண்ட மிரண்டா, புரபோஸ் செய்யும்போது ஒருவர் மற்றொருவருக்கு முதுகு காட்டி நின்றுகொண்டு, திடீரென திரும்பி மோதிரத்தை எடுத்து புரபோஸ் செய்யுமாறு ஆலோசனை கூறியிருக்கிறார்.

சரியாக போட்டோஷூட் அன்று மிராண்டா கமெராவுடன் தயாராக இருக்க, சவியும் ஷரத்தும் நடக்கப்போவது தெரியாமல் ஒருவருக்கொருவர் முதுகைக் காட்டியபடி நின்று திடீரென திரும்ப, ஷரத்துக்கு ஒரே அதிர்ச்சி, சவி கையில் மோதிரத்துடன் முழங்காலில் நிற்கிறார்.

சவிக்கு ஒரே அதிர்ச்சி, ஷரத்தும் கையில் ஒரு மோதிரத்தை வைத்துக்கொண்டு முழங்காலிடுகிறார். சர்ப்ரைஸ் தாங்காமல் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக்கொண்டு வாய் விட்டுச் சிரித்திருக்கிறார்கள் இருவரும்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த மிராண்டாவின் கண்களை ஆனந்தக் கண்ணீர் மறைக்க, அந்த அரிய தருணத்தை மிஸ் பண்ணிவிடக்கூடாது என மின்னல் வேகத்தில் போட்டோ எடுத்துத்தள்ளியிருக்கிறார் அவர். வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு திரைப்படம் போல, அந்த காதல் ஜோடி ஆச்சரியத்தில் திளைக்கும் காட்சியைக் காணலாம்.