கனடாவில்..
கனடாவில் உள்ள மிருகக்காட்சிசாலை ஒன்றில் 44 ஆண்டுகளுக்கும் மேலாக “லூசி” என்ற இலங்கை யானை ஒன்று அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனை விடுவிக்கக் கோரி இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகரிடம் ஒமல்பே சோபித்த தேரர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். JUSTICS FOR ANIMALS & NATURE எனப்படும் அமைப்பின் தலைவரான தேரர் அந்த யானையை உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
1977ஆம் ஆண்டு 10 ரூபாய்க்கு குறித்த யானையை ஜேர்மன் நாட்டவர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளார். பின்னர் அதனை கனடாவில் உள்ள மிருகக்காட்சிசாலை ஒன்றில் 9000 லொடருக்கு விற்பனை செய்துள்ளார்.
44 ஆண்டுகளாக குறித்த யானை துன்பம் அனுபவிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அதனை விடுக்குமாறு தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.