கொரோனா வைரஸை பரவச் செய்யும் ஆபத்தான நகரமாக கொழும்பு!!

880

கொரோனா..

எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் மக்கள் ஒன்றுக்கூடும் இடங்களுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது கொழும்பில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் உள்ளது. எனினும் கொழும்பிற்கு வரும் மற்றும் வெளியேறும் மக்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

அவசியமற்ற இடங்களுக்கு செல்வதனை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் ஒன்று கூடுவதனை தவிர்க்க வேண்டும். கொழும்பு என்பது மிகவும் வேகமாக கொரோனா பரவ கூடிய இடமாகும்.

கொழும்பில் இருந்து வெளியிடங்களுக்கு கொரோனாவை வேகமாக பரப்ப கூடிய ஆபத்து உள்ளது. எனவே பண்டிகை காலப்பகுதியை அவதானமாக கொண்டாட வேண்டும். இல்லை என்றால் ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

கொழும்பிற்கு வரும் மக்களை கட்டுப்படுத்த கூடிய விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.