இலங்கையில் இணையவாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி : UNLIMITED டேட்டா பெக்கேஜ் வழங்க நடவடிக்கை!!

1605

மகிழ்ச்சியான செய்தி..

பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய எல்லையற்ற டேட்டா குறித்த தகவல்களை இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என இணைய சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதிக்குள் இந்தத் தரவுகளை இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது.

தற்போது இணைய சேவை நிறுவனங்கள் சமர்ப்பித்த டேட்டா பெக்கேஜ் தொடர்பில் மதிப்பிடும் பணிகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவலுக்கமைய எதிர்வரும், ஏப்ரல் மாதத்திற்குள் முதல் சுற்று வரம்பற்ற டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.