கடலாமை..
திருகோணமலை – கிண்ணியா பிரதேச மீனவர்களின் கரைவலையில் இன்று காலை பெரிய வகையை சேர்ந்த கடலாமை ஒன்று சிக்கியுள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரைவலையினை கரையில் சென்று இழுத்துக் கொண்டிருந்த போது இவ்வாறு பிடிபட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
பின்பு இதனை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.