நெல் கொள்வனவு..
வவுனியா மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நிர்ணயிக்கப்பட்ட தரத்தினைக் கொண்ட சம்பா, கீரி சம்பா, நாடு ஆகிய நெல்களை 1 கிலோ 56.50 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் முகவர்களிடமிருந்து ஈர நெல் சம்பா – 46 ரூபாவிற்கும், நாடு -44 ரூபாவிற்கும் கொள்ளவனவு செய்யப்படுவதுடன் மேலதிக தகவல்களுக்கு 0212060913 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வேப்பங்குளம் நெல் களஞ்சிய சாலை, மின்சார வீதியில் அமைந்துள்ள நெல் களஞ்சிய சாலை ஆகியவற்றில் நெல்கள் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றன.