வவுனியா பொது வைத்தியசாலை பல் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில்!!

1162

பல் வைத்தியர்கள்..

நாடளாவிய ரீதியில் பல் வைத்தியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு வவுனியா அரச பல் வைத்திய அதிகாரங்கள் சங்கமும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று காலை முதல் பல் வைத்தியர்கள் கடமைக்கு சமூகமளிக்காமல் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவசர சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை பல் வைத்திய சேவைக்கு எதிரான சதிகளை முறியடிக்கும் வகையில் குறித்த அடையாள பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.