இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்!!

466

WI

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டுவென்டி-20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டுவென்டி–20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது, நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் இயான் மோர்கன் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்கள் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு டுவைன் ஸ்மித்(30), கெய்ல்(36) சிறப்பான துவக்கம் தந்தனர்.

கடைசி கட்டத்தில் அணித்தலைவர் சமியின் அதிரடியில் 18.5 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2–0 என கைப்பற்றியது.