வவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் காயம்!!

2542

விபத்து..

வவுனியா முதலாம் குருக்குத்தெரு வீதியில் இன்று(24.03.2021) மாலை இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முதலாம் குருக்குதெரு வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மேலும் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளுடன் விபத்தை ஏற்படுத்திய பட்டா ரக வாகனம் அவ்விடத்திலிருந்து அகன்று சென்ற நிலையில் மற்றுமொரு பட்டா வாகனம் மூலம் மோட்டார் சைக்கிள் வாகன திருத்துமிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.