வவுனியாவில் துவிச்சக்கர வண்டி திருட்டு தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார்!!

1369

துவிச்சக்கர வண்டி திருட்டு..

வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட துவிச்சக்கர வண்டியொன்றை அடையாளம் தெரியாத நபரொருவர் திருடிச் சென்ற சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையம் அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக நேற்று மாலை இளைஞரொருவர் துவிச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று மீண்டும் இரவு 10.30 மணியளவில் திரும்பிய சமயத்தில் துவிச்சக்கரவண்டி களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த இளைஞனால் இன்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் காணப்படும் சீ.சி.ரீ.வியின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.