வட, கிழக்கில் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

286

Doctorsவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மருத்துவர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக அங்குள்ள மருத்துவமனை மூடப்பட்டு வரும் நிலையில், உள்ளக பயிற்சிகளை முடித்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு அரசாங்கம் நியமனங்களை வழங்காது இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

உள்ளக பயிற்சிகளை பூர்த்தி செய்த 1100 மருத்துவர்களுக்கு அரச சேவைகள் ஆணைக்குழு இதுவரை நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தில் பயின்ற மாணவர்கள் உள்ளக பயிற்சிகளை பூர்த்தி செய்யவில்லை அரச சேவைகள் ஆணைக்குழு தெரிவித்து வருகிறது.

ஆனால் இந்த மருத்துவர்கள் கடந்த டிசம்பர் மாதம் உள்ளக பயிற்சிகளை பூர்த்தி செய்துள்ளனர். எனினும் அரச சேவைகள் ஆணைக்குழு நியமனங்களை வழங்காது இருந்து வருகிறது.

1100 மருத்துவர்களில் 400 பேரை வடக்கு, கிழக்கில் உள்ள வைத்தியசாலைகளுக்கு நியமிக்க முடியும். அத்துடன் இடமாற்றங்களால் ஏற்படும் வெற்றிடங்களையும் நிரப்ப முடியும்.

இந்த நிலையில், சட்டமா அதிபராவது இதில் தலையிட்டு பயிற்சிகளை முடித்த மருத்துவர்களுக்கு நியமனங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டொக்டர் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.