வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு : மரங்களுடன் ஒருவர் கைது!!

1817

மரக்கடத்தல்..

சட்டவிரோதமான முறையில் அரிமரங்களை கடத்திச் சென்ற நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் பொலிஸார் தெரிவிக்கையில்,

நேற்று (25.03) மாலை கோதண்ட நொச்சிகுளம் காட்டுப் பகுதியிலிருந்து கூமாங்குளம் நோக்கி சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக ஈச்சங்குளம் இராணுவத்திற்குக் கிடைத்த இரகசிய தகவலிற்கமைய,

அப் பகுதிக்கு சென்ற ஈச்சங்குளம் இராணுவத்தினர், அம்மிவைத்தான் பகுதியில் வைத்து நூதனமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட நபரை வாகனத்துடன் கைது செய்து ஈச்சங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த மரக்கடத்தலில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், பட்டா ரக வாகனம் ஒன்றும் 15 அடி நீளமுடைய 15 அரி மரங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.