வவுனியாவில் 2 வயது சிறுமிக்கும் அவரது தந்தைக்கும் கொரோனா தொற்று!!

2727

கொரோனா தொற்று..

வவுனியா, முருகனூர் பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுமிக்கும் 34 வயதுடைய தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் தாயாருக்கு கடந்த 11 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,

தாயார் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுடன், தந்தை உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் சுகாதார பிரிவினரால் வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இன்று (26.03) காலை அவர்களிடம் மேற்கொண்ட பிசீஆர் முடிவுகள் இன்று இரவு வெளியாகின. அதில் 2 வயது சிறுமிக்கும், சிறுமியின் தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.