வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!

2942


தேர்த் திருவிழா..வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா இன்று (27.03.2021) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.ஆலயத்தின் பிரதம குரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, பக்தர்களின் ஆரோகரோ கோசத்திற்கு மத்தியில் கருமாரி அம்மன் தேரில் எழுந்தருளினார்.
ஆண்களும், பெண்களும் என பக்த அடியார்கள் புடை சூழ்ந்து கருமாரி அம்மனை தாங்கிய தேரின் வடத்தை பிடித்து இழுத்து வீதி உலா வந்தனர்.


இதன்போது அடியார்கள் தமது நேர்திக்கடன்களை தீர்க்க கற்பூர சட்டி ஏந்தியும், அங்க பிரதிஸ்டை செய்தும், விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டும் கருமாரி அம்மனின் அருட் கடாற்சற்சத்தைப் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, குறித்த ஆலயத்திற்கு தாமரை பூ பறிக்கச் சென்ற நிலையில் ஆசிரியர் ஒருவர் குளத்தில் மூழ்கி காலை மரணமடைந்தமையால் அமைதியான முறையில் தேர்த் திருவிழா நடைபெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.