
ஆர்யா, அனுஷ்கா இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டு உள்ளது. சென்னை நட்சத்திர ஹோட்டலில் இருவரும் இரகசிய சந்திப்புகள் நடத்துவது அம்பலமாகியுள்ளது. ஆர்யாவுடன் ஏற்கனவே பல நடிகைகளை இணைத்து கிசு கிசுக்கள் வந்தன.
நடிகைகளை வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து மடக்குவதாகவும் விமர்சிக்கப்பட்டார். நயன் தாராவுடனும் சேர்த்து பேசப்பட்டார். தற்போது அனுஷ்காவுடன் சுற்றும் விஷயம் தெரியவந்துள்ளது.
இருவரும் இரண்டாம் உலகம் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நட்பாக பழகினார்கள். தற்போது அந்த நட்பு இறுக்கமாகியுள்ளதாகவும், காதலிப்பதாகவும் கிசு கிசுக்கள் வருகிறது.
இருவரும் அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கை கோர்த்தபடி ஜோடியாக வந்து சாப்பிட்டனர். நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். இது தினமும் தொடர்கிறதாம்.





