கிளிநொச்சியில் தான் விற்ற டிப்பரினால் நடந்த கோர விபத்து : வெளியாகிய கண்கலங்க வைக்கும் பின்னணி!!

51727

கிளிநொச்சியில்..

பளை, இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தந்தையும், அவரது இரண்டு மகன்களும் உ.யிரிழந்தனர். பளை, தர்மகேணியை சேர்ந்த மணல் வியாபாரியான அழகரத்தினம் சற்குணநாதன் (34) என்பவரே உ.யிரிழந்தார்.

அவரது இரண்டு மகள்கள் உ.யிரிழந்ததாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த போதும், உ.யிரிழந்தவர்கள் அவரது மகன்கள் என்பது தெரிய வந்துள்ளது.

9, 12 வயதுடைய மகன்களே உ.யிரிழந்தனர்.மணல் வியாபாரியான அவர் காரில் சென்று கொண்டிருந்த போது, டிப்பர் வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானார்.

இந்த டிப்பர் இவரது பாவனையில் இருந்த நிலையில் அண்மையிலேயே அவரால் விற்பனை செய்யப்பட்டிருந்தது. அந்த டிப்பரை விற்பனை செய்த பின்னர் கொள்வனவு செய்த காரில் பயணித்த போதே விபத்தில் சிக்கினார்.

கிளிநொச்சி விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் வாகனம், இத்தாவில் பகுதியில் அதற்கு நேரெதிரே பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

வீதியை விட்டு விலகிய டிப்பர் வாகனம், மோட்டார் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் பளை – தர்மங்கேணி பகுதியை சேர்ந்த சற்குணம் சாருஜன், சற்குணம் சாரங்கன் என்ற 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் ஸ்தலத்திலேயே பரிதாபமாக பலி!!

கிளிநொச்சி – முகமாலை, இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தந்தை படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் மோட்டார் வாகனமொன்றும் டிப்பர் வாகனமொன்றும் சற்றுமுன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனது .

இதன்போது மோட்டார் வாகனத்தில் பயணித்த இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் வாகனத்தை செலுத்திச் சென்ற தந்தை படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.