வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி, நடத்துனர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை!!

884

பி.சீ.ஆர் பரிசோதனை..

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்துனர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கொவிட் – 19 இன் தாக்கம் வடபகுதியில் மீளவும் அதிகரித்துள்ள நிலையில் வவுனியா பிராந்திய சுகாதாரப் பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இ.போ.சபையின் வவுனியா சாலையில் இருந்து வடபகுதியின் ஏனைய மாவட்டங்களுக்கும், தென்பகுதிக்கும் செல்லும் பேரூந்துகளில் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இதன்போது பிசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.