இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டை சோதனையிட்ட போது சிக்கிய பெண் : கணவர் தப்பியோட்டம்!!

28420

திருகோணமலை..

திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் கேரள க.ஞ்.சா மற்றும் ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப்.பொ.ரு.ளு.ட.ன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சந்திரலால் தலைமையில் சென்ற குழுவினர் விசேட சோ.தனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அவரது வீட்டைச் சோ.தனையிட்ட போது பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்த 23 க.ஞ்.சா பொ.தி.க.ள் கை.ப்.ப.ற்றப்பட்டுள்ளன. அத்துடன் பொதி செய்வதற்காகப் பயன்படுத்தும் உபகரணம் உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கை.ப்.பற்றியுள்ளனர்.

இதேவேளை 2.98 கிராம் ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப்.பொ.ரு.ளு.ம் மீ.ட்.க.ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமால்தீன் சுமைரா (31வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கணவர் பொலிஸாரை கண்டதும் த.ப்.பி.ச் சென்றுள்ள நிலையில் அவருடைய மோட்டார் சைக்கிள் ப.றிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், த.ப்பிச் சென்றவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட பெண்ணை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பெண் தொடர்பில் ஏற்கனவே திருகோணமலை நீதிமன்றில் போ.தை.ப்.பொ.ரு.ள் வழக்குகள் இடம்பெற்று வருவதாகவும், ஏற்கனவே இப்பெண்ணுக்கு முன் கு.ற்றங்கள் இருப்பதால் வி.சாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக மொரவெவ பொலிஸார் கூறியுள்ளனர்.