சமூக ஊடகங்களில் அவதூறு செய்வோரை தண்டிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து கவனம்!!

665

சமூக ஊடகங்களில்..

சமூக ஊடகங்களில் அவதூறு பிரச்சாரம் செய்வோரை தண்டிக்கும் வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நபர்களின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையிலான சமூக ஊடகப் பிரச்சாரங்களை குற்றச்செயலாக கருதி தண்டிக்கும் சட்டங்களை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்படுகின்றதாக தெரியவருகிறது.

நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு செய்வது உள்ளிட்ட மனித ஆளுமைகளை களங்கப்படுத்தும் செயற்பாடுகளை குற்றச் செயலாக அறிவிக்கும் சட்டத்திருத்தம் செய்யப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தை நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பியூமன்தி பீரிஸ் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்து சமூக ஊடகங்களில் அவதூறு பிரச்சாரம் செய்வோரை தண்டிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மனித கௌரவத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட நபர்கள் சமூக ஊடங்களில் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பிலா அல்லது திட்டமிட்ட வகையில் வேண்டுமென்றே அவதூறு பிரச்சாரம் செய்வோரா இதில் தண்டிக்கப்படுவார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இணையத்தில் அவதூறு பிரச்சாரங்களை தடுப்பதற்கு தற்பொழுது குற்றவியல் விசாரணைப் பிரிவும், கணனி அவசர பதிலளிப்பு பிரிவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.