தாய்வானின் சுரங்கப் பாதையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 36 பேர் பலி!!

368


ரயில் விபத்தில்..


தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் வெள்ளிக்கிழமை ரயிலொன்று தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 36 ஆக உயர்வடைந்துள்ளது.இந்த விபத்தில் மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக ஆரம்ப கட்ட தகவல்களின் படி நால்வர் உயிரிழந்ததாகவும் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாகவும் கூறியிருந்தன.


பல சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு தைப்பேவிலிருந்து டைதுங் நோக்கி பயணித்த எக்ஸ்பிரஸ் ரயிலொன்றே ஹுவாலியனுக்கு வடக்கே ஒரு சுரங்கப்பாதையில் தண்ட வாளத்திலிருந்து இறங்கி, சுரங்கப்பாதையின் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.