வவுனியா காட்டுப்பகுதியில் பாரிய மரக்கடத்தல் முயற்சி முறியடிப்பு!!

1199


புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில்..


வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில் பாரிய மர கடத்தல் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.குறித்த காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலால்த சில்வாவின் வழிகாட்டலில்,


கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாறசிங்க பிரேமசிறி தலைமையிலான பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் பெறுமதியான 50 முதிரை மரக்குற்றிகள் காட்டுப்பகுதியில் வெட்டப்பட்டு ஏற்றுவதற்கு தயாராக காணப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.


இந்நிலையில் மரங்களை வெட்டிய சந்தேக நபர்களோ வாகனங்களோ அவ்விடத்தில் இல்லாத நிலையில் பொலிஸார் மரக்குற்றிகளை பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றி வந்துள்ளனர்.

குறித்த மரங்களை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் பொலிஸாரால் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.