கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.பி கனிமொழி கொரோனா உடை அணிந்து வந்து வாக்களித்தார்!!

372


எம்.பி கனிமொழி..


கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.பி கனிமொழி கொரோனா கவச உடையணிந்து படி வந்து வாக்களித்தார். கடந்த ஏப்ரல் 3ம் திகதி தூத்துக்குடி எம்.பி-யும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்றுபாதிப்பு இருப்பது உறுதியானது.இதனையடுத்து, அவர் திட்டமிட்டிருந்த தேர்தல் பிரச்சாரம் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனிமொழி தனிமைப்படுத்திக் கொண்டார்.


தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்னை ஆர்.கே சாலையில் உள்ள வாக்குச் சாவடியில் கொரோனா கவச உடையணிந்து படி வந்து வாக்களித்தார்.

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. 7 மணி நிலவரப்படி 71.79 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது.