ஜோதிடம் பார்க்கச் சென்ற யுவதி ஒருவரை நிர்வாணமாக்க முயற்சித்த ஜோதிடர் கைது!!

317

Arrestமை வெளிச்சம் பார்க்கச் சென்ற யுவதி ஒருவரை நிர்வாணமாக்க முயற்சித்த ஜோதிடர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தீராத நோய் ஒன்றை குணப்படுத்திக் கொள்ளும் நோக்கில் குறித்த யுவதி, ஜோதிடரிடம் சென்றுள்ளார்.

நோய்க் காரணிகளை கண்டறிந்து சொல்ல வேண்டுமாயின், ஆடைகளை களைய வேண்டுமென ஜோதிடர் குறித்த யுவதிக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆடைகளை களைய முடியாது எனத் தெரிவித்த குறித்த யுவதி, இது குறித்த ஆணமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆணமடுவ தசாநாயக்கபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த முறைப்பாட்டை அடுத்து 49 வயதான ஜோதிடரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.