53 ஆசனங்கள் கொண்ட பேருந்தினை செலுத்திய 15 வயதான சிறுவன் கைது!!

5022


சிறுவன் கைது..


ஹம்பாந்தோட்டை, மித்தெனியவில் 53 ஆசனங்களை கொண்ட பேருந்து ஒன்றை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் 15 வயதான பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான பேருந்தை தங்களுடைய வீட்டிலிருந்து மித்தெனிய நகரத்துக்கு செலுத்திக் கொண்டு செல்லும் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இம்முறை, கல்விப்பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சையில் தோற்றவிருக்கும் வயது குறைந்த ஒருவரை பேருந்தை செலுத்த அனுமதி கொடுத்த தந்தையை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.