அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை உயர்வடையும் சாத்தியம்!!

559


பேக்கரி உற்பத்தி..


பாம் எண்ணெய் மீதான தடை காரணமாக அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை உயர்வடையும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்தது.அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,


“பாம் எண்ணெய் பேக்கரி தயாரிப்புகளுக்கு இன்றியமையாத ஒரு மூலப்பொருளாகும். இந்நிலையில் பாம் எண்ணெய் மீதான தடை பேக்கரி தொழிற்துறையை பாதிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.


பாம் எண்ணெய் இறக்குமதி மீதான தடையை ரத்து செய்யுமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார், இந்தத் தடை நாடு முழுவதும் உள்ள அனைத்து பேக்கரிகளையும் மூட கட்டாயப்படுத்தும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்ஹபாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு செயலாளர் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-