அழகியை எதிர்பார்த்த சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பறவை முனியம்மா!!

447

Sivakarthikeyan

பிரபல நாயகர்களிடம் ஒரு புதுமுக இயக்குனர் கால்ஷீட் வாங்குவது என்பது அவ்வளவு இலகுவான விடயம் கிடையாது. அவருடைய கால்ஷீட்டை வாங்குவதற்காக பல தடவை அவர் இருக்கின்ற இடம் தேடிப் போக வேண்டியிருக்கும்.

அப்படி அவரை சந்தித்து கதை சொல்லி கால்ஷீட்டை வாங்கி விட்டாலும், அவர் சொல்கிற நாயகி, டெக்னீஷன்களைத் தான் இயக்குனர் படத்தில் போட வேண்டும். இல்லையென்றால் அவருக்கு குட்பை சொல்லி விட்டு கிளம்பி விடுவார்கள்.

தமிழ் சினிமாவில் வசூலை அள்ளும் நாயகர்களில் முன்னணியில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஹன்ஷிகாவுடன் ஜோடி போட வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை.

அதனால் ஒரு படத்திலாவது அவருடன் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்று நினைத்தவருக்கு மான் கராத்தே இயக்குனர் தான் வசமாக மாட்டினார்.

அவரிடம் நீங்க கதை கூட சொல்ல வேணாம், எனக்கு ஜோடியா ஹன்ஷிகாவை புக் பண்ணினாப் போதும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். உடனே இயக்குனரும் யார், யாரையோ பார்த்து ஹன்ஷிகாவின் கால்ஷீட்டை வாங்கி விட்டார்.

அவர் கேட்ட கோடி சம்பளத்தை கூட சிவாவுக்காக தயாரிப்பாளரிடம் கேட்டு வாங்கி கொடுத்து விட்டார்.

இதை அறிந்த அப்போதைய ஹன்ஷிகாவின் லவ்வரான சிம்பு ஹன்ஷிகாவுக்கு தடை போட்டார். இதை அறிந்து கொண்ட சிவகார்த்திகேயன் எங்கே ஹன்ஷிகா சிம்புவின் பேச்சைக் கேட்டு இந்தப் படத்திலிருந்து விலகி விடுவாரோ என்று பயந்து அவசரம் அவசரமாக ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்யச்சொல்லி ஹன்ஷிகா தான் நாயகி என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

இதனால் ஹன்ஷாகாவால் அந்தப் படத்திலிருந்து விலக முடியவில்லை. இப்போது மான் கராத்தே படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் மீதி இருந்த நிலையில் அந்தப்பாட்டுக்கு ஏதாவது மும்பை நடிகையை இறக்கி விடுவார் என்று எதிர்பார்த்த சிவகார்த்திகேயனுடன் பரவை முனியம்மாவை ஆட விட்டு பாடலை எடுத்து முடித்திருக்கிறார் திருக்குமரன்.

இதை விட்டா சிவாவை பழி வாங்க எனக்கு வேற வாய்ப்பு கிடைக்காது என்பது தான் இயக்குனர் திருக்குமரன் தனது உதவியாளர்களிடம் சொல்லி சிரிக்கும் செய்தியாம்.