வவுனியா புகையிரத நிலையத்தில் உயிரிழந்து அழுகிய நிலையில் காணப்படும் மாடு : அசமந்த போக்காக செயற்படும் நகரசபை!!

1314

புகையிரத நிலையத்தில்..

வவுனியா புகையிரத நிலைய வளாகத்தினை அண்மித்த பகுதியில் உயிரிழந்து அழுகிய நிலையில் மாடு காணப்படுவதினால் சுற்றுப்புறச்சூழல் மாசடையும் நிலமை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் நேற்று (08.04.2021) காலை 4.30 மணியளவில் மாடொன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதுடன் சம்பவ இடத்திலிலேயே மாடு உயிரிழந்துள்ளது.

அதனையடுத்து புகையிரத நிலைய ஊழியர்கள் உயிரிழந்த மாட்டினை அப்புறப்படுத்தி புகையிரத நிலைய வளாகத்தினை அண்மித்த பகுதியில் வைத்துள்ளனர்.

உயிரிழந்த மாட்டினை அகற்றுமாறு வவுனியா நகரசபைக்கு அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும் அவ்விடத்திலிருந்து உயிரிழந்த மாடு அகற்றப்படவில்லை.

உயிரிழந்த மாட்டிலிருந்து அழுகிய நீர் வழிந்து வெறியேறுவதுடன் காகங்களும் மாட்டினை இறையாக்கி எடுத்துச் செல்வதுடன் தூர்நாற்றமும் வீசி வருகின்றது.

இதன் காரணமாக சுற்றுப்புறச்சூழல் மாசடையும் நிலமை ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நகரசபையினரை தொடர்பு கொண்டு வினாவிய போது,

குறித்த விடயம் தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை சுகாதார பிரிவினருக்கு வழங்கியுள்ளோம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தனர்.