வவுனியா அஞ்சல் அலுவலகத்தில் கடும் வெயிலின் மத்தியில் காத்திருந்த 25க்கு மேற்பட்ட முதியவர்கள்!!

1293

அஞ்சல் அலுவலகத்தில்..

வவுனியா கண்டி வீதியில் அமைத்து மத்திய அஞ்சல் அலுவலகத்தில் மாதாந்த உதவிப்பணத்தினை பெறுவதற்காக 25க்கு மேற்பட்ட முதியவர்கள் கடும் வெயிலுக்கு மத்தியில் காத்திருந்துள்ளனர்.

வடமாகாண சபையின் சமூக சேவைகள் திணைக்களத்தினால் பொதுசன உதவி எனும் தொனிப்பொருளில் முதியவர்களுக்கு மாதாந்த உதவிப்பணம் அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த மாதாந்த உதவித்தொகையினை பெறுவதற்கு இன்று (10.04.2021) காலை தொடக்கம் வவுனியா மத்திய அஞ்சல் நிலையில் 25க்கு மேற்பட்ட முதியவர்கள் கடும் வெயிலின் மத்தியில் காத்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தின் பிரதான அஞ்சல் அலுவலகமாக காணப்படும் இவ் அஞ்சல் அலுலத்தில் உதவிப் பணத்தினை வழங்கும் செயற்பாட்டில் ஒரு உத்தியோகத்தர் மாத்திரமே ஈடுபட்டுள்ளமையினாலேயே முதியவர்கள் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

நாட்டின் பல பாகங்களில் அதிகளவிலான கடும் வெப்பத்தினூடனான காலநிலை நிலவி வருகின்ற இவ் சமயத்தில் முதியவர்களை கடும் வெயியில் காத்திருக்க வைத்து சேவையினை முன்னெடுத்து வருகின்ற வவுனியா அஞ்சல் அலுவலகம் தொடர்பில் வவுனியா மாவட்ட சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.