வவுனியா பேரூந்து நிலையத்திலிருந்து குறைந்தளவு பயணிகளுடன் பயணிக்கும் பேரூந்துகள்!!

1205

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து..

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு தினசரி 40க்கு மேற்பட்ட பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் தற்போது கொரோனா தொற்று காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்தளவில் காணப்படுகின்றது.

கொரோனா அச்சத்தினால் மக்கள் தற்போது சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் அதிகளவில் பிரயாணத்தினை மேற்கொள்வதினால் தமிழ் இ சிங்கள புத்தாண்டு காலத்திலும் குறைந்தளவு பயணிகளுடன் பேரூந்துகள் தமது பயணத்தினை தொடர்கின்றன. இதன் காரணமாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

உள்ளூர் பேரூந்து சேவையில் பயணிகளின் எண்ணிக்கை கனிசமானளவு காணப்படுகின்ற போதிலும் வெளிமாவட்டங்களுக்கான பேரூந்துகள் குறைந்தளவு பயணிகளுடன் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து சேவையினை தொடர்கின்றன.