வவுனியா நகரில் நகரசபை வாகனத்தினால் ஒரு மணிநேரம் மக்கள் சிரமம்!!

1976


நகரசபை வாகனத்தினால்..



வவுனியா நகரில் நகரசபை சுத்திகரிப்பு வாகனத்தினால் தர்மலிங்கம் வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் வரை பாதிப்படைந்திருந்தமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.



சித்திரை புத்தாண்டு நாளையதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் புத்தாடை,, பொருட்கள் கொள்வனவில் மக்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.




இந்நிலையில் வவுனியா நகரின் பஜார் வீதி , ஹொரவப்பொத்தானை வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, புகையிரத நிலைய வீதி, குருமன்காடு ஆகிய இடங்களில் இரவு நேரத்திலும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.


தர்மலிங்கம் வீதியில் இன்று (13.04.2021) இரவு 8.00 மணியளவில் நகரசபையின் சுத்திகரிப்பு வாகனம் வர்த்தக நிலையங்களின் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் சுமார் 1மணி நேரமாக மேற்கொண்டிருந்தனர்.

அதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்ததுடன் மக்களின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்பட்டது. இதனை அவதானித்த பொதுமக்கள் சிலர் நகரசபை வாகனத்தினை சற்று ஒரமாக நிறுத்துமாறு கோரிய போதும்,


நகரசபை ஊழியர்கள் அவர்களின் கருத்தினை செவிமடுக்காது வீதியில் வாகனத்தினை நிறுத்தி கழிவுகளை அகற்றும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

மக்களின் நடமாட்டம் குறைவடைந்த பின்னர் கழிவுகளை அகற்றாது மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்படாது புத்தாண்டு தினத்தில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் வர்த்தக நிலைய கழிவுகளை அகற்றிய விடயம் தொடர்பில் வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.