IPL போட்டிகளை நடத்த தென்னாபிரிக்கா கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

470

IPLஇந்தியாவில் தேர்தல் நேரம் என்பதால் 2009ஆம் ஆண்டு போல் ஐபிஎல். கிரிக்கெட் போட்டிகளை தென்னாபிரிக்காவில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நினைத்திருந்தது.

ஆனால் அந்த எண்ணம் கைவிடப்பட்டு ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்க திட்டமிட்டதன் காரணம் தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் 180 கோடி இந்திய ரூபாய் கேட்டதாக சி.எஸ்.ஏ.யிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் உரிமையாளர்களும் அவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. மாறாக ஐக்கிய அரபு நாடுகளில் நடத்த 60 கோடி மட்டுமே செலவாம்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையை இந்திய கிரிக்கெட் சபை பல விதங்களில் போட்டுப் பார்த்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம், அவர்கள் சபைத் தலைவரை இந்தியா விரும்பவில்லை. அவருக்கு விடுப்பு கொடுத்து அனுப்பப்பட்டது.

மேலும் 3 டெஸ்ட் 7 ஒருநாள் தொடரை 2 டெஸ்ட் 3 ஒருநாள் போட்டிகளாக இந்தியா குறைத்தது. சச்சினின் 100வது டெஸ்ட் அங்கு நடந்திருக்க வேண்டியது. அதில் கல்லா கட்ட முடியாது என்று அவசரம் அவசரமாக மேற்கிந்திய தீவுகளை அழைத்து வெற்றிப் பெருமிதம் கொண்டாடியது பிசிசிஐ என்பதும் குறிப்பிடத்தக்கது.