வௌ்ளவத்தையில் பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டவர் கைது!!

744

Arrestவௌ்ளவத்தை – ஹெம்டன் வீதி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலி 187,000 ரூபா பெறுமதியானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது குறித்த பகுதியில் கடமையில் இருந்த பொலிஸார் சந்தேகநபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இவர் தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.