மறைந்த நடிகர் விவேக் : இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இறுதித் தருணங்கள்!!

1350

நடிகர் விவேக்..

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனது 59ஆவது வயதில் இன்று காலமானார். மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிம்ஸ் வைத்தியசாலையின் பிரதித் தலைவர் வைத்தியர் ராஜு சிவசாமி இந்த விடயத்தை அறிவித்திருந்தார். கே.பாலச்சந்தர் கண்டெடுத்த முத்துக்களில் மிக முக்கியமானவர் விவேக். அடுத்தடுத்து அவருடைய இயக்கத்தில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு, பின் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன.

அவர் இதுவரை, ஆறு முறை தமிழ்நாடு மாநில விருதுகளை பெற்றுள்ளார். மறைந்த சின்ன கலைவாணரும், மக்களின் கலைஞருமான விவேக்கின் இறுதி தருணங்கள் இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில்,

நடிகர் விவேக் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!!

உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் விவேக் உயிரிழந்துள்ளார். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக்கிற்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

எக்மோ கருவி பொருத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். இவர் தமது நகைச்சுவை மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.