வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் பொலிசாரின் சோதனை அதிகரிப்பு!!

2022

ஓமந்தை..

வவுனியா, ஓமந்தை சோதனைச் சாவடி ஊடாக செல்லும் வாகனங்கள் மீதான சோதனைக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று மாலை (17.04) மரம் க.டத்தலில் ஈடுபட்ட வாகனம் ஒன்று இராணுவத்தினர் வ.ழிமறித்த போது நிறுத்தாது இரு இராணுவத்தினர் மீது மோ.தியதுடன், அங்கிருந்து த.ப்பிச் சென்று பாலம் ஒன்றில் மோ.தி விபத்துக்குள்ளாயிருந்தது.

இதில் இரு இராணுவத்தினர் படுகாயமடைந்திருந்ததுடன், வாகனச் சாரதி த.ப்.பி.யோடியிருந்தார். இதனையடுத்து, குறித்த இராணுவ சோதனைச் சாவடி ஊடாக செல்லும் மோட்டார் சைக்கிள்கள்,

பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் மறிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், சில மணிநேரம் காத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த இராணுவ சோதனைக் கெடுபிடிகளால் பயணிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.